முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.- மக்கள் நல கூட்டணியில் த.மா.கா. இணைந்தது

சனிக்கிழமை, 9 ஏப்ரல் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா எந்த அணியில் இடம்பெறும் என்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்ட நிலையில் தே.மு.தி.க.- மக்கள் நல கூட்டணியில் த.மா.கா. இணைந்தது.

த.மா.கா. நிலையை அறிந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, வாசனை சேர்க்க முயற்சி செய்தார். த.மா.கா. கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தி.மு.க. அணியில் சேருவதற்கான கதவும் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் த.மா.கா. தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா, தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி கட்சிகள், பா.ம.க. ஆகிய 3 அணிகளும் அழைத்தன. பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க வாசனும் த.மா.கா. தலைவர்களும் ஆர்வம் காட்டவில்லை. பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க - மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்களிடம் வாசன் பேசினார். பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் வாசன் பேசியது த.மா.கா.வில் உள்ள சில மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. வாசனிடம் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வேறுவழியே இல்லாமல், தே.மு.தி.க - மக்கள் நலக்கூட் டணிக்கு போய் சேர வேண்டிய நிர்ப்பந்தமும் கட்டாயமும் வாசனுக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் 3.25 மணிக்கு மக்கள் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷனான், முத்த்ரசன் ஆகியோர் தேனாம் பேட்டையில் உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அதன் தலைவர் ஜி.கே வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் ஜி.கே வாசனுடன் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் கோயம்பேட்டில் உள்ல தே.மு.தி.க தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பிறகு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணியில் த.மா.கா. இணைந்துள்ளது. சட்டசபை தேர்தலில் தேமுதிக 104 தொகுதிகள், மதிமுக 29 தொகுதிகள், த.மா.க 26 தொகுதிகள், விடுதலை சிறுத்தை 25 தொகுதிகள், இ.கம்யூனிஸ்டு 25 தொகுதிகள், மார்க்சிஸ்டுக்கு 25 தொகுதிகள் போட்டியிடுகின்றது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்