முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலியை சுட்டுக்கொன்ற தென் ஆப்பிரிக்க தடகள வீரர் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

புதன்கிழமை, 6 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

பிரட்டோரியா  -  காதலியை சுட்டுக்கொன்ற ஊனமுற்ற தென் ஆப்பிரிக்க தடகள வீரர் பிஸ்டோரியசுக்கு  6ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு கால்களையும் இழந்து ஒலிம்பிக்கில் ஓடி சாதனை படைத்த பிஸ்டோரியஸ் தடகள உலகில் தற்போது வீழ்ச்சி அடைந்த கதாநாயகனாக உள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஊனமுற்ற தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன் கேம்ப்பை சுட்டுக்கொன்றார். அவரது அறைக்கு காதலி ரீவா வந்த போது அவர் கொள்ளையர் என கருதி பிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார்.

இந்த துப்பாக்கி குண்டு தாக்குதலில் ரீவா ரத்த வெள்ளத்தில் மரணமடைந்தார். இந்த எதிர்பாராத கொலை கடந்த 2013ம் ஆண்டு அவரது வீட்டில் நடந்தது. இரண்டு கால்களையும் ஒலிம்பிக்கில் பங்கேற்ற சாதனை வீரரான பிஸ்டோரியஸ் செய்த கொலை வழக்கு பிரிட்டோரியா கோர்ட்டி நடந்தது. இந்த வழக்கில் நீதிபதிதோகே சிலே   மாசிபா நேற்று தீர்ப்பளித்தார், அந்த தீர்ப்பில் பிஸ்டோரியசுக்கு அவர் 6ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு வெளியாகும் போது ரீவாவின் பெற்றோர் பாரி, ஜூன் ஆகியோர் கோர்ட் விசாரணை அறையில் இருந்தார்கள். இந்த தீர்ப்பு நாளின் போது பிஸ்டோரியஸ் மற்றும் ரீவா குடும்பத்தினர், அதிக அளவில் குவிந்திருந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்