முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீநகரில் ஊரடங்கு: 84வது நாளாக இயல்பு வாழ்க்கை முடக்கம்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,  பிரிவினைவாதிகள் நடமாட்டத்தை ஒடுக்க ஜம்மு காஷ் மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீரில் 84வது நாளாக நேற்றும் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

காஷ்மீரின் டிரால் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து கடந்த இரு மாதத்திற்கும் மேலாக  ஏறக்குறைய 84 நாட்களாக பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்துகிறார்கள். வன்முறையிலும் ஈடுபடுகிறார்கள்.

போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் கடந்த இரு மாதங்களில் இதுவரை 2 போலீசார் உள்பட 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10ஆயிரம் பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

இதனால் இரு மாதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.  இந்த நிலையில் லால் சவுக் பகுதியை ஆக்ரமிக்கப்போவதாக பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்தார்கள். அவர்களது நடமாட்டத்தை ஒடுக்க நேற்று ஸ்ரீநகர், பாடமலூ, மய்சுமா,  போலீஸ் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லால் சவுக்கிற்கு செல்லும் பாதைகள் மூடப்பட்டன. அங்கு பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கடைபிடிக்க இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  காஷ்மீரில் கடந்த 84 நாட்களாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நேற்றும் பிரிவினை வாதிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்