முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்:கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்  கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது.       இம்முகாமில் புதிய குடும்ப அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, பட்டா சிட்டா பெயர் மாற்றம் என பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்ததாவது.              தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அம்மா திட்ட முகாம் தருமபுரி மாவட்டத்தில் 470 கிராமங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் வட்டங்கள் வாரியாக கிராமங்களைத் தேர்வு செய்து தற்போது கொட்டாவூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாமில் மக்களிடத்தில் மனுக்களைப் பெற்று உடனடி தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.              தருமபுரி மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் தங்களது கைபேசி மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்து நியாய விலைக்கடைகளின் மூலம் பெறப்படும் உணவு பொருட்கள் குறித்து குறுஞ்செய்தி வரப்பெறும். மேலும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் 2 கம்ப்யூட்டர்கள் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் வருவாய்த்துறை, ஜாதி சான்றிதழ்கள் உட்பட தேவையான அனைத்து சான்றிதழ்களையும்  பொதுமக்கள் பெற்று பயனடையலாம். அரசின் திட்டங்கள், பயன்கள், பொதுமக்கள் அனைவருக்கும் சென்று சேரும் வண்ணம் ஒவ்வொரு முகாம்களிலும் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அமைக்கப்படுகிறது. 46 கிராமங்களில் 100 சதவீதம் தனிநபர் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜாதி, வருமானம், இருப்பிடச்சான்றிதழ்கள் பெற அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை தொடர்புகொள்ளலாம். பொதுமக்களுக்கு ஏதேனும் விவரங்கள் அறிய வேண்டுமெனில் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் 1077, 1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ் அப் எண். 8903891077 ஆகிய எண்களுக்கு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். 

முன்னதாக நுகர்வோர் உணவுப்பொருள் வழங்கல் துறையின் சார்பில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து 47 பயனாளிகளுக்கும்,  கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார். முதியோர் உதவித்தொகை 18 மனுக்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. இம்முகாமில்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  இரா. சண்முகசுந்தரம், நல்லம்பள்ளி வட்டாட்சியர்  ராஜசேகர், வட்ட வழங்கல் அலுவலர்  ராஜராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்