முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேளாரஅள்ளி கிராமத்தில் ரூ. 54.930 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி: அமைச்சர் கே.பி. அன்பழகன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேளாரஅள்ளி கிராமத்தில் ரூ. 54.930 லட்சம் மதிப்பில் மூங்கப்பட்டி முதல் ரெட்டியூர் ஓனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில்                                   உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்    பூமி பூஜை செய்தார்.        இந்நிகழ்ச்சியில்  உயர்கல்வித்துறை அமைச்சர்    தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2016-17 ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில்  144.75 கி.மீ நீளத்திற்கு  ரூ.2517.00 இலட்சங்கள் மதிப்பீட்டில் 86 சாலைகளை மேம்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. மேற்காணும் சாலைகளில் பாலக்கோடு ஒன்றியம் பேளாரஹள்ளி ஊராட்சியில்          ரூ.54.930 இலட்சம் மதிப்பீட்டில் 2.00 கி.மீ நீளமுள்ள மூங்கப்பட்டி முதல் ரெட்டியூர் ஓனி வரை உள்ள சாலை மேம்பாடு செய்யும் பணி  உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த மண் சாலை தார் சாலையாக மேம்பாடு செய்வதன் மூலம் மூங்கப்பட்டி, ரெட்டியூர் மற்றும் கக்கன்ஜிபுரம் ஆதிதிராவிடர் காலணி ஆகிய குக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைவர் என  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்  தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  அ. சங்கர், கோட்டாட்சியர்  இராமமூர்த்தி, துணைப்பதிவாளர்  சொ.தனபால், பாலக்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மாதப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்  தொ.மு.நாகராசன், பாலக்கோடு சர்க்கலை ஆலை தலைவர்  அரங்கநாதன், மத்தியக்கூட்டுறவு வங்கி இயக்குநர்  வேலுமணி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர்                எம். பெரியசாமி, ஜெர்த்தலாவ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்  வீரமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மாநில செயலாளர்  சின். அருள்சாமி, ஜெர்த்தலாவ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர்  சங்கீதா பெரியசாமி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்  ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்