முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் அட்டைகளில் அனைவரின் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் உள்ள 119 ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைகளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து அறிவுறுத்தினார்.

 

கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த 119 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்து தலைமை தாங்கினார்.மாவட்ட வழங்கல் அலுவலர் சந்தியா, வட்ட வழங்கல் அலுவலர் இளவரசி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள ரேஷன் அட்டைகளில் 5 வயதிற்கு மேற்பட்டவரின் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க விற்பனையாளர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். 5வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பிறந்த தேதியை விற்பனை முனையத்தில் பதிய வேண்டும். அனைத்து முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளின் ஆதார் எண்ணை மார்ச்-6ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். ஒரு நபர் உள்ள குடும்ப அட்டைகளில் ஆதார் எண்ணை பதிவிடுவதோடு, அதனை அவர் சார்ந்த குடும்பத்துடன் இணைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

மேலும் முதியோர் உதவித் தொகை பெறுபவர்கள் தனியாக வசிப்பவர்கள் என்றால் அவர்களை தவிர்த்து பிறரை குடும்பத்துடன் இணைக்க வேண்டும், மார்ச்-15ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைகளில் நிரந்தர கைப்பேசி எண்ணை பதியவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

ரேஷன் அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு ஏப்ரல்-1ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதால், ஆதார் எண் பதியாத ரேஷன் அட்டைகள் ஸ்மார்ட் கார்ட் பெற வழி இல்லாமல் போகும் என்பதால், அனைத்து ரேஷன் அட்டை தாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண்ணை ரேஷன் அட்டையோடு இணைக்க நியாயநிலைக் கடைக்காரர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து அறிவுறுத்தினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்