முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் சித்ரா பவுர்ணமிவிழா: 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

புதன்கிழமை, 10 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலையில் சிறப்புமிக்க சித்ரா பவுர்ணமி விழாவையட்டி 20 லட்சம் பக்தர்கள் நேற்று கிரிவலம் வந்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கிவருவதும், நினைத்தாலே முக்தி தருவதும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். தென்னகத்துக்கு கயிலாயம் என போன்றப்படும் திருவண்ணாமலையில் கிரி உருவாக, கிருபை கடலாக, காட்சி அளிக்கிறார் சிவபெருமான். அதனால்தான் மலை உருவமான மகேசனை தரிசிக்க லட்சோப லட்சம் பக்தர்கள் பவுர்ணமி நாளில் வலம் வந்து வழிபடுகின்றனர்.

பக்தர்கள் கிரிவலம்

பவுர்ணமிகளில் தனி சிறப்பு மிக்கது சித்ரா பவுர்ணமி இந்நாளில் கிரிவலம் வருவோரின் பாவம் தீரும், புண்ணியம் சேரும், நினைத்தது நடக்கும் என்பது சிவனடியார்களின் நம்பிக்கை இந்நிலையில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பவுர்ணமியையட்டி கிரிவலம் செல்ல நேற்று அதிகாலை 1.50 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது இதையடுத்து நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர். கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பவுர்ணமியையட்டி அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை 4 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று பகலில் நடை அடைக்கப்படாமல் இரவு 11 மணிவரை தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொது தரசினம், கட்டண தரிசனம், கோவிலுக்கு வெளியே வடஒத்தவாடை தெரு தென்ஒத்தவாடை தெரு, தேரடி வீதிவரை நீண்டிருந்தது. சுமார் 5 மணிநேரம் முதல் 6 மணிநேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.

இந்த சிறப்புமிகு சித்ரா பவுர்ணமி விழாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 14 கி.மீ. தூரமுள்ள மாலையை வலம் வந்து அஷ்டலிங்கங்களையும் வழிபட்டு வந்து அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை தரிசனம் செய்தனர். சித்ரா பவுர்ணமியையட்டி நகரின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு பல்வேறு ஆன்மீக அமைப்பு, இயக்கங்கள் சார்பில் அன்னதானம் நீர்மோர் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு 2146 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையட்டி 11 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து கிரிவல பாதைக்கு செல்ல மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. 27 இடங்களில் கார்பார்க் வசதியும் சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

வடக்கு மண்டல ஐஜி சி.ஸ்ரீதர் தலைமையில் வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன் உள்பட 3 டிஐஜிகள் 5 எஸ்பிகள் உள்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோவிலுக்குள் 63 இடங்களிலும் முக்கிய சாலைகளில 45 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கபபட்டது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவுரையின்பேரில் நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், கோவில் இணை ஆணையர் ஹரிபிரியா, தி.மலை ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் டி.கே.லட்சுமி நரசிம்மன் ஆகியோர் பக்தர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்