முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே செந்துறை புனித சூசையப்பர் ஆலய திருவிழா

வியாழக்கிழமை, 11 மே 2017      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம், -திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நடந்தது. திருவிழா முதல்நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திண்டுக்கல் பங்குதந்தை மரிய இஞ்ஞாசி தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். முன்னதாக திருக்கொடி நகரின் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து இரவில் திருப்பலி நடைபெற்றது.

விழாவின் 2&ம் நாள் காலை புதுநன்மை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கோம்மையான்பட்டி பங்குத்தந்தை அலெக்சாண்டர்,ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலையில் திருப்பலியை தொடர்ந்து புனித செபஸ்தியார் வேண்டுதல் சப்பர பவனி நடந்தது. அதனை தொடர்ந்து இரவில் (எஸ்.எப்.எஸ்) இளையோர் மற்றும் குழந்தை இயேசு பீடப்பூக்கள் அமைப்பின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பங்கேற்றனர்.

3&ம் நாள் மாலை பொதுபொங்கல், இரவு 7 மணியளவில் செந்துறை புதியகுரு ஆசீர்ஜான்சன் தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடந்தது. இரவில் இன்னிசை கச்சேரியும், 4&ம் நாள்  மாலை 7 மணிக்கு புனிதர்களின் ஆடம்பர சப்பர பவனியும்,அதன்பின்னர் திருக்கொடி இறக்கமும், செந்துறை பங்குத்தந்தையர்கள் தலைமையில் நன்றி திருப்பலியும் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தையர்கள் லாரன்ஸ்,ஜெயராஜ் மற்றும் செந்துறை பங்கு மக்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்