முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நவீன வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் : கலெக்டர் (பொ) சூர்யபிரகாஷ் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்காக பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்துவதற்காகவும், உள் விளையாட்டு அரங்கம் ஒன்று தனியாக அரசு மற்றம் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் உருவாக்குவதற்காக மாவட்ட கலெக்டர்(பொ) .சூர்யபிரகாஷ் தலைமையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்(பொ) தெரிவித்ததாவது:

நவீன வசதிகள்

கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் தனியார் நிறுவனங்கள் தொழிலதிபர்கள் மற்றும் அரசு நிதியதவியுடன் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அமைப்புகளை உருவாக்க இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு பரிசுகள் மற்றும் திட்டங்களை அறிவுறுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். இளைஞர்களுக்கு வழிகாட்டவும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு தனித்திறமை உள்ளது. அது என்னவென்று கண்டுகொண்டு அவர்களுக்கு சரியான முறையில் வயதிற்கு ஏற்றாற்போல் பயிற்சி அளித்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறச்செய்ய வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்களை நாம் ஊக்கப்படுத்தி பயிற்சியளிக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்காக சில வாய்ப்புகளை நாம் உருவாக்கி கொடுப்பது நமது கடமையாகும்.

அதனடிப்படையில், நவீன வசதிகளுடன் கூடிய ஜிம் பயிற்சி மையம் அமைத்தல், நீச்சலில் பயிற்சி பெற்று போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நீச்சல் குளம் அமைத்தல், விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் மின்விளக்கமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுத்தல் 2 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக தனியாக கொட்டகை அமைத்தல், நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைத்தல், தனியாக மற்றோரிடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய உள் விளையாட்டரங்கம் அமைத்தல் மற்றும் மாணவ, மாணவியர்களுக்காக மாவட்ட விளையாட்டு விடுதி அமைத்தல் போன்ற வசதிகள் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட உள்ளன என மாவட்ட கலெக்டர் (பொ) .சூர்யபிரகாஷ் கூறினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, முதன்மை செயல் அலுவலர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அய்யண்னன், மருத்துவ பணிகளின்.மாவட்ட வன அலுவலக அலுவலர்கள் புக@ர் காகிதஆலை நிர்வாகிகள்,மாட்ட கையுந்து கழக, தடகள நிர்வாகிகள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து