முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு இசட் பிளஸ் பாதுப்பு

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, எதிர்க்கட்சிகள் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீராகுமாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயாக கூட்டணியின் சார்பில் ராம்நாத்கோவிந்த்  வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இசட் பிளஸ் பாதுகாப்பு :-

ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமார் அறிவிக்கப்பட்டதும் அவருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையின் பேரில், மீராகுமாருக்கு தற்போது “இசட் பிளஸ்” பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

"இசட் பிளஸ்" பாதுகாப்பு என்பது நாட்டின் உயரிய பாதுகாப்பு ஏற்பாடாகும். மிக, மிக முக்கிய தலைவர்கள், மற்றும்  பயங்கரவாதிகள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே "இசட் பிளஸ்" பாதுகாப்பு அளிக்கப்படும் இதற்கு முன்பு  முன்னாள் சபாநாயகர் என்பதால் மீராகுமாருக்கு “எஸ்” பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் மட்டும் உடன் சென்று வந்தார். தற்போது அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் அதிரடி படையினர் பாதுகாப்புக்காக உடன் செல்வர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து