முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.கல்லுப்பட்டியில் கல்வி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்:

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒலிம்பிக் தீபமேற்றி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் குடியரசு தினம் மற்றும் பாராதியார் தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான மாணவ,மாணவியர் பங்கேற்ற இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்ற இவ்விழாவில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்து விளையாட்டு விழாவில் பங்கேற்றிடும் மாணவ,மாணவியரின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் மாணவிகள் தொடர் ஓட்டமாக கொண்டு வந்த ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தும்,புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டும் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: அம்மாவின் அரசு விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவித்து வருகிறது.கிராம,நகர்ப்புற,மாவட்ட,மாநில,தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கும்,வீராங்கனைகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டுவது அம்மாவின் அரசு மட்டும் தான்.அம்மா பெயரில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் 1லட்சம் வழங்கி அம்மாவின் அரசு சாதனை படைத்தது.பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியருக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்து சாதனை படைத்ததில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அரசுக்கும்,புரட்சித்தலைவி அம்மாவின அரசுக்கும் இணையான திட்டத்தை இந்தியாவில் வேறெங்கும் செயல்படுத்தப்படவில்லை.அம்மாவின் திட்டத்தை முன்னோடி திட்டமாக கொண்டு தான் பிறமாநிலங்கள் தங்களது திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.பள்ளி கல்வித்துறையில் அன்றும் இன்றும் என்றும் மாணவர்களின் நலனை பாதுகாக்கின்ற ஒரே அரசு அம்மாவின் அரசு தான் என்று பேசினார்.
 இந்த நிகழச்சியில் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜயன்செல்லப்பா எம்.எல்.ஏ.,சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ்,நீதிபதி,முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து,ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலைராஜா,மாவட்ட உடற்கல்வி அலுவலர் செங்கதிர்,மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன்,மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் காயத்ரிராணி,காந்திநிகேதன் தலைமை ஆசிரியர் வீரராஜ்,ஆசிர நிர்வாகி ரகுபதி,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் திருப்பதி,ஓம்கேசந்திரன்,தமிழ்ச்செல்வம்,ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி,அன்பழகன்,மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,வக்கீல்ரமேஷ்,நிலையூர் முருகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் கல்லுப்பட்டி பேரூராட்சி சேர்மன் மாணிக்கம்,பேரூர் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன் கட்சி நிர்வாகிகள் பாவடியான்,பாஸ்கரன்,சுகுமார்,சாமிநாதன்,பழனிச்சாமி,தங்கராஜ்,பொன்ராஜ்,நாகலெட்சுமி,சிங்கராஜா,தர்மர்,வேம்புவேந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடற்கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து