முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

 தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (16.10.2017) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான  அ.கார்த்திக்,   தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், வடகிழக்கு பருவமழைக்காக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், வயர்லஸ் கருவிகள், நீச்சல் வீரர்கள், மீட்பு குழுக்களின் எண்ணிக்கை, மாவட்டத்தில் குளங்கள் மற்றும் கண்மாய்களின் எண்ணிக்கை, வடகிழக்கு பருமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக நட்டத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை, குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் தூர் வாரப்பட்ட கண்மாய்களின் எண்ணிக்கை,  டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியத்துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, காவல் துறை மற்றும் இதர தொடர்புடைய அலுவலர்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான  அ.கார்த்திக்,   விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில்;, அலுவலர்கள் பெரும் மழையின் காரணமாக வெள்ளம் சூழப்படும் காரணங்களை கண்டறிவதோடு மழைநீரை தேங்கவிடாமல் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படவும், வருவாய்த்துறையுடன் தீயணைப்பு மற்றும் காவல் துறை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் போதிய பாதுகாப்பு அளித்திடவும், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் உள்ள கண்மாய்களில் உடைப்பு ஏற்படாமல் பராமரித்து வைத் ்கவும், மேலும், உடைப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை சீரமைப்பதற்கு போதுமான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ குழுக்களை தயார்நிலையில் வைத் ்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், தொற்றுநோய் வராமலிருக்க தேவையான நோய்தடுப்பு மருந்துகளை இருப்பு வைத்திடவும், நடமாடும் மருத்துவ வசதி  போன்ற பணிகளை மேற்கொள்ளவும், தீயணைப்புத்துறையினர் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திடவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பதுகாப்பாக தங்க வைக்க தேவையான பள்ளி கட்டிடங்கள்,  ண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் வைத்திடவும் மழைக்காலங்களில் சீரான மின்சாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
டெங்கு காய்ச்சலை முற்றிலும் அகற்றுவதற்கு சுகாதாரத்துறையினர், நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள், ஒலிபெருக்கி மூலம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்தினை உரிய இடைவேளையில் தெளித்திடவும் குடிநீரில் குளோரின் கலந்து பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும். மருத்துவ முகாம்கள் நடத்தி போதுமான சிகிச்சை வழங்கிடவும், நிலவேம்பு கசாயம் தயாரித்து வழங்கிடவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான  அ.கார்த்திக்,  வழங்கினார். 
இக்கூட்டத்தில மாவட்ட வருவாய் அலுவலர்  தி.செ.பொன்னம்மாள்  திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  வடிவேல்  மகளித்திட்ட அலுவலர்  கல்யாணசுந்தரம்  இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.செல்வராஜ்  அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மரு. ாவுக்கரசு  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர்  கார்திகேயன்  துணை இயக்குநர் (சுகாதார பணிகள்)  சண்முகசுந்தரம்  தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்  கிஷோர்குமார்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  ஞானசேகரன்  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  தி.அபிதாஹனீப்  உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  சேதுராமன்  தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  தங்கவேல்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்  மாவட்ட வழங்கல் அலுவலர்  தி.ரசிகலா   அனைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து