முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம்

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -பழனி கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்ஞீசம், பங்குனி உத்திரம்,வைகாசி விசாகம் மற்றும் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை தீபத்திருவிழா ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாப்படுகிறது. இதில் கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கார்த்திகை ஆகிய இரண்டும் மலைக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.
பழனி கோவிலில் சூரசம்ஹாரம் அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெறுகிறது.
நேற்று மாலை நடந்த சூரசம்ஹாரத்தில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் (யானைமுகன்) வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் போர்க்காட்சி போல் நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோர் உருவங்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு ஞீஜை செய்து 4 ரதவீதிகளில் உலா வந்தபின்னர் 4 பகுதிகளில் வைக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் சாயரட்சை ஞீஜைக்கு பின் முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எஅழுந்தருளி சூரபத்மனை எதிர்கொண்டு அடிவாரம் கிரிவீதி பகுதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சூரனாக வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி பெருக்கில் கோஷம் முழங்கினர். அதன்பின் முருகப்பெருமானுக்கு வெற்றி விழா நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று மலைக்கோவிலில் காலையிலும், பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலையிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து