முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி இரண்டாம் முறையாகவும் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

ஐ.நா. : சர்வதேச நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான தேர்தலில், இந்தியா சார்பில் மீண்டும் போட்டியிட்ட தற்போதைய நீதிபதி தல்வீர் பண்டாரி இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் தனது வேட்பாளர் கிறிஸ்டோபர் க்ரீன்வுட்டைப் போட்டியில் இருந்து விலக்கியதை அடுத்து, பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை நீதித்துறையின் முக்கிய அங்கமான சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வருகிறது. இதில் 15 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் இந்தியாவின் தல்வீர் பண்டாரி (69) நீதிபதியாக உள்ளார். அவரது பதவிக் காலம் 2018 பிப்ரவரி மாதம் முடிய உள்ளது.

இந்நிலையில், நீதிபதி பணியிடங்களுக்கான அடுத்த தேர்தல் நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஐ.நா. பொது சபையின் 193 வாக்குகளில் பண்டாரி 183 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவருக்குப் பாதுகாப்பு கவுன்சிலின் 15 வாக்குகளும் கிடைத்தன.

நீதிபதி பண்டாரி, தனது பதவிக் காலத்தில், கடல் தொடர்புடைய தகராறுகள், அன்டார்டிகா திமிங்கில வேட்டைத்தொழில், இனப் படுகொலை குற்றம், தீவிரவாதத்துக்கு நிதியுதவி உள்ளிட்ட 11 முக்கிய சர்வதேச வழக்குகளில் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

தற்போது இரண்டாவது முறையாக பண்டாரி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் மேலும் 9 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து