முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை: 2வது இடத்துக்கு முன்னேறினார் கேப்டன் விராட் கோலி

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி:இலங்கைக்கு எதிரான தொடரில் 610 ரன்கள் விளாசிய விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

893 புள்ளிகளுடன்...
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து அசத்தினார். இலங்கைக்கு எதிரான தொடரில் விராட் கோலி 610 ரன்களை குவித்தார். இதன்காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப்பட்டியலில் விராட் கோலி, இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 893 புள்ளிகளுடன் விராட் கோலி 2-ஆம் இடத்தில் உள்ளார்.

இந்தியா முதலிடம்
முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் 938 புள்ளிகளுடன் உள்ளார். மூன்றாம் இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 879 புள்ளிகளுடன் உள்ளார். 4 ஆம் இடத்தில் புஜாரா உள்ளார். அணிகளை பொறுத்தவரை இந்திய அணி தொடந்து முதலிடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து