முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியமான் கடற்கரையை சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,- அரியமான் கடற்கரையில் நடைபெற்ற காணும் பொங்கல் விழாவில் நடைபெற்ற விளையாட்டு  நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி,அரியமான் கடற்கரையை சுற்றுலாப்பயணிகள் கவரும் வகையில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரையில் காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மணிகண்டன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தொடர்ந்து  தமிழர்களின் பாண்பாட்டு நிகழ்வை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தொடர்ந்து மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன்  கடல் நீர் சாகச விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில்  வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரும்,அமைச்சரும் வழங்கினார்கள், நிகழ்ச்சியில்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் .ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைர் ஜெயஜோதி, மாவட்ட விளையாட்டு அலுவலா் பி.பிராங்க் பால் ஜெயசீலன், மாவட்ட ஆட்சியாரின் நேர்முக உதவியாளா் (வளர்ச்சி) திருமதி.உமாமகேஸ்வரி மாவட்ட சுற்றுலா அலுவலா் இரா.மருதுபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவுலர்.கோ.அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள், சுற்றுலாப்பயணிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 இவ்விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் பேசியதாவது:
 மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வளா;ந்து வரும் மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனித தளமான இராமேஸ்வரத்தினை சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தளமாக மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் காணுப்பொங்கல் திருநாளான இன்று தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிh;வாகம் ஒருங்கிணைந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை கவா்ந்திடும் வகையில் அரியமான் கடற்கரையில் பல்வேறு கடல்நீர் சாகச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுற்றுலா கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நீச்சல்போட்டி, கயாக், வாட்டா; பீடில், பீச் வாலிபால் போன்ற விளையாட்டுப் போட்டிகளும், சுற்றுலாத் துறையின் சார்பாக பரதநாட்டியம், சிலம்பம், கரகாட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம், சாட்டை குச்சி, மாடு, மான், மயில் போன்ற வேடமிட்டு நடனமாடுதல் போன்ற பல்வேறு தமிழா; பண்பாடுகளை பறைசாற்றிடும் வகையில் கலைநிகழ்ச்சிகளும், இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டடுள்ளன. கடல் சாகச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரா்கள் பலா் பங்கேற்றனா்.விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவா்களுக்கு முறையே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000யும் வழங்கப்பட்டு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இராமேஸ்வரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக கடலோர பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.943 இலட்சம் மதிப்பிலும், அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.382 இலட்சம் மதிப்பிலும் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, அரியமான் கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் கடற்கரைக்கான சாலையினை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இராமேஸ்வரத்தில் தொடர்ந்து பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறந்த சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படும் என மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து