முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான்கு மொழிகளில் தன் மகனை அறிமுகப்படுத்தும் மன்சூரலிகான்

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகர் மன்சூரலிகான் தன்னுடைய மகன் அலிகான் துக்ளக்கை ‘கடமான்பாறை’ மூலம் நான்கு மொழிகளில் அறிமுகப்படுத்துகிறார்.

பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார்.இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார்.

இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகான் கூறும்போது, ‘தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கட்டடித்து விட்டு தாந்தோன்றித் தனமாக வாழ்வதால் ஏற்படும் பிரச்சனைகள், இன்றைய இளைய சமுதாயத்தின் மனோபாவம், இதை நகைச்சுவையாக பிரதிபலிப்பதுதான் இந்த கடமான் பாறை.படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன அந்த பாடல்கள் ஒவ்வென்றும் ஒவ்வொரு வகையாக இருக்கும்.

ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் சதாசிவ் கோனே நீர்வீழ்ச்சியிலும், பாப்பநாய்டு பேட்டை, மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து