முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள் நிலை குறித்து மத்திய இணை செயலாளர் பந்தல சீனிவாசன் ஆய்வு

திங்கட்கிழமை, 21 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் இணைச் செயலாளர் பந்தல ஸ்ரீனிவாசன் மாவட்டத்தில் வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டப் பணிகளின் கீழ்  மாவட்ட தொழில் மையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் வளர்ச்சி குறித்து, மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன்  முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

 இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 115 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும்.  அதனடிப்படையில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன  மேம்பாடு, பொது சுகாதார முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, அடிப்படை உட்கட்;டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்திறன் பயிற்சி வழங்கி தனிநபர் வருமானத்தை உயர்த்துதல் ஆகிய 5 காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மாவட்ட முன்னேற்றத்தின் ஒருபகுதியாக மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வரும் நிறுவனங்களை மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணைச் செயலர் பந்தல ஸ்ரீனிவாசன் ஆய்வு செய்தார். பின்பு, கூடித்தொழில் செய்ய வேண்டும் என்ற பாரதியின் தொலைநோக்கு சிந்தனையோடு தொடங்கப்பட்ட கூட்டு குழுமத் தொழிலான மின்சாதன பொருட்கள்  தயார் செய்யும் பரமக்குடி  மின்சாதன  பொருட்கள்  தயாரிக்கும் தொழில் கூடத்தை மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணைச் செயலர் பந்தல ஸ்ரீனிவாசன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 அதன்பிறகு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணைச் செயலர் பந்தல ஸ்ரீனிவாசன் பாரத பிரதமரின்  வேலை வாய்ப்பு திட்டத்தில் கடன் பெற்று மூன்று வருடங்களை நிறைவு செய்து கடனை முழுமையாக கட்டி முடித்தவர்களுக்கு தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதிய தொழில் நுட்பங்களை புகுத்திடவும் 15 சதவீத மானியத்துடன்  ரூபாய்  ஒரு கோடி வரை 2வது முறையாக திட்டத்தில் கடன் வழங்கும் திட்டம் விரைவில்  அறிமுகபடுத்தப்பட உள்ளது  என  தெரிவித்தார்.
   இதுதவிர, இக்கூட்டத்;தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு  எந்தெந்த சாத்திய கூறுகள் உள்ளன என்பது பற்றியும் எவ்விதமான குழுமத் தொழிலுக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில்  மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், கூடுதல் தொழில் ஆலோசகர், சென்னை சிவஞானம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.சதீஷ்குமார், மகளிர் திட்ட திட்ட அலுவலர் கோ.குருநாதன், தேசிய சிறுதொழில் நிறுவன ஆணைய கிளைமேலாளர், மதுரை பிரேம்ஆனந்த் உள்பட  பல்வேறு வங்கிகளின் கிளை மேலாளர்கள், தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து