முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் இருக்க உத்தரவு

புதன்கிழமை, 20 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு: அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு படைகள் அதிஉயர் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மெகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாய கட்சி - பாரதீய ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்தது.இதையடுத்து அங்கு  மீண்டும் கடுமையான பாதுகாப்பு கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த ராணுவம் தயாராகி வருகிறது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 28-ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. இதனையடுத்து சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிஉயர் உஷார் நிலையில் வைத்திருக்க எல்லையில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், எல்லைச் சாவடிகள், சோதனைச் சாவடிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து