முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் சுரங்கம் தோண்டும் பணிகள் அர்ச்சகர் புகாருக்கு தேவஸ்தானம் மறுப்பு

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் புதையல் எடுப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்றதாக முன்னாள் கோயில் அர்ச்சகர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி தேவஸ்தானம் மீது முன்னாள் அர்ச்சகர் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் திருப்பதி கோயில் மடப்பள்ளியில் சுரங்கம் தோண்டுவதாக புகார் அளித்தார். இதை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.

இது குறித்து தேவஸ்தான செயல் அலுவலர் ஸ்ரீனிவாச ராஜு கூறுகையில், மடப்பள்ளியில் புனரமைப்பு பணிகள் மட்டுமே நடக்கிறது. மடப்பள்ளியில் பிரசாதம் செய்யும் போது அந்த வெப்பத்தை மடப்பள்ளியின் சுவர்கள் தாங்கக் கூடிய அளவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. புதையல் தோண்டுவதற்கான முயற்சி நடந்தது என்பதெல்லாம் தவறு. அந்த பணிகளும் ஆகம ஆலோசகர்கள் அனுமதியுடன் நடைபெற்றது. அதுபோல் கோயிலில் நகைகள் காணாமல் போனதாக வந்த புகார்களும் தவறானது என்றார் ஸ்ரீனிவாச ராஜு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து