முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர்கோவில் தெப்ப திருவிழா 19ம் தேதி நடைபெறுகிறது:-

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

 அழகர்கோவில்;  -      மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தெப்ப திருவிழாவும் ஒன்றாகும். இந்தவிழாவானது வருகிற 18ம் தேதி திங்கட்கிழமையன்று மாலை 5.45க்கு மேல் 6.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் கஜேந்நிரமோட்சம் நடைபெறும் தொடர்ந்து 19ம் தேதி செவ்வாய்கிழமையன்று பவுர்ணமி நிறைநாளில் காலை 8.15 மணிக்கு மேல் 9 மணிக்குள் மீனலக்கனத்தில் மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பாடாகிறார் தொடர்ந்து வழி நெடுக பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைபட்டி புஷ்கரணி தெப்பத்திற்கு போய் கிழக்குபகுதியில் உள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார் அப்போது சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்வார்கள்.
    கடும் வறட்சியின் காரணமாக இந்த வருடம் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் சுவாமி குளக்கரையை மட்டும் சுற்றி வருவார். மேலும் அன்று மாலையிலேயே சுவாமி அதே பரிவாரங்களுடன் வந்தவழியாகவே கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேரும். இந்த விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து