முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே.வுக்கு யோயோ டெஸ்டா ? பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேட்டி

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யோ யோ டெஸ்ட் தேவையில்லை, அதைவிட சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியுள்ளார்.

முதல் போட்டி...

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல்) இன்று சென்னையில் தொடங்க உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்காக பெங்களூரு அணி வீரர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.

அவசியம் இல்லை...

இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யோ யோ டெஸ்ட் தேவையில்லை என பயிற்சியாளர் பிளெமிங் கூறியுள்ளது கிரிக்கெட் அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னை அணியின் உடற்தகுதி பயிற்சித் திட்டத்தில் யோ யோ டெஸ்ட் இல்லை. அதைவிட உலகத்தரமான உடற்பயிற்சி வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர் எங்கள் அணியில் உள்ளதால், அதற்கு அவசியம் இல்லை. அதனால், அதற்காக நேரம் செலவிட மாட்டோம்” என்று கூறினார்.

யோ யோ டெஸ்ட் என்று கூறப்படும் உடல் மற்றும் உளவியல் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து