முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய வாலிபால்: ஒலிம்பிக் தகுதி சுற்றில் விளையாட இந்தியா தகுதி

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

டெக்ரான் : ஆசிய ஆண்கள் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆண்களுக்கான 20-வது ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் சி பிரிவில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், ஓமன் அணிகள் இடம் பெற்றுள்ளன.முதல் போட்டியில் 3-2 என்ற செட்களில் கஜகஸ்தானை வென்ற இந்தியா, 2-வது போட்டியில் சீனாவிடம் 3-0 என்ற செட்களில் வீழ்ந்தது. இந்நிலையில், ஓமனை 3-1 என்ற செட்களில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் கால் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. அது மட்டுமின்றி சீனாவில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளது. இதில் வென்றால் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கலாம்.

டெஹ்ரான் தொடரின் கால் இறுதி சுற்றில் சி பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த சீனா, இந்தியா, ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, ஈரானுடன் தலா ஒரு முறை மோதும். அதில் அதிக வெற்றிகளை பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா முதல் போட்டியில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இன்று நடைபெறும் 2-வது போட்டியில் ஈரானுடன் விளையாடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து