முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து: மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என வீழ்த்தியது லிவர்பூல்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

அன்ஃபீல்டு : விர்ஜில் வான் டிஜிக், முகமது சாலா கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என வீழ்த்தியது லிவர்பூல்.

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் அணிகள் மோதின. லிவர்பூல் அணிக்கு சொந்தமான அன்ஃபீல்டு மைதானத்தில் 53 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த ஆட்டம் நடைபெற்றது.இந்த சீசனில் தோல்வியை சந்திக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லிவர்பூல் 14-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. அலெக்சாண்டர் அர்னால்டு பாஸ் செய்த பந்தை விர்ஜில் வான் டிஜிக் கோலாக மாற்றினார்.அதன்பின் இரு வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிட ஆட்டத்திற்குப் பின் இன்ஜூரிக்கான நேரம் வழங்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் முகமது சாலா கோல் அடிக்க லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் 22 போட்டிகளில் 21 வெற்றி, ஒரு டிரா மூலம் 64 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் சிட்டி 23-ல் 15-ல் வெற்றி, 3-ல் டிரா, ஐந்தில் தோல்வி ஆகியவை மூலம் 48 புள்ளிகள் பெற்றி 2-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து