முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது

சனிக்கிழமை, 28 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது 199 நாடுகளில் பரவி விட்டது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை உலுக்கியுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பிற நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 6 லட்சத்தை தொட்டுள்ளது. அதே போல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 27, 352 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 133,355 பேர் மீண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து