முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா: ஒரு வருட சம்பளத்தை நன்கொடை அளித்தார் எடியூரப்பா

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரசுக்கு எதிராக எனது ஒரு வருட சம்பளத்தை #CMRF Covid19 க்கு நன்கொடை செய்கிறேன். நீங்கள் அனைவரும் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், கொரோனாவுக்கு உதவுங்கள் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் விருப்பம் தெரிவித்தனர். அந்த உணர்வை மதிக்கும் வகையில்,  குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த PM-CARES நிதியத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த நிதி தற்போதைய துன்பகரமான சூழலை   சமாளிக்கவும், எதிர்காலத்தில் இதே போன்ற ஆபத்துகளை சமாளிக்கவும் உதவும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதனை போல், மாநில அரசுகளும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி பொருள் உதவி அளிக்க வேண்கோள் விடுத்தது. மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES  நிதியத்திற்கும் அந்தந்த மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா,  நாம் அனைவரும் கடந்து செல்லும் மிகவும் கடினமான நேரம் இது. இந்த தொற்றுநோயை நாம் ஒன்றாக எதிர்த்துப் போராடுவது முக்கியம். தனிப்பட்ட முறையில், எனது ஒரு வருட சம்பளத்தை #CMRF Covid19 க்கு நன்கொடை செய்கிறேன். நீங்கள் அனைவரும் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், கொரோனாவுக்கு உதவுங்கள் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து