முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் முன்னிலையில் பாதுகாப்பு படையினரின் கார் கண்ணாடியை துப்பாக்கியால் உடைத்த ராணுவ வீரர் கைது

சனிக்கிழமை, 27 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் முன்னிலையில் பாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை துப்பாக்கியால் ஆக்ரோஷமாக உடைத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் விழாவின்  போது, ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை துப்பாக்கியால் ஆக்ரோஷமாக உடைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியின் போது நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிரவாத தாக்குதல் ஒன்றை முறியடித்துள்ளதாக ரஷ்யா இந்த சம்பவத்தை விவரித்துள்ளது.

அந்த வீடியோவில் அமைதியாக நடந்து வரும் நிகிதா ஈரோஷென்கோ (22) என்ற ராணுவ வீரர் ஒருவர், யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென பாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை தன்னுடைய கையிலிருக்கும் இயந்திரத் துப்பாக்கியால் உடைக்க முயல்கிறார்.  சுமார் 500 அடி தொலைவில் புடின் அமர்ந்திருக்க, சட்டென அங்கு வரும் மற்ற அதிகாரிகள் அந்த வீரை மடக்கிப் பிடிக்கின்றனர்.

நல்ல வேளையாக அவரது துப்பாக்கி அந்த நேரத்தில் வெடிக்கவில்லை. அரசு வட்டாரம் இந்த சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் என வர்ணிக்க, தன்னை அதிபர் முன் ராணுவ மரியாதை செலுத்த அனுமதிக்காததால் கோபத்தில் அவர் இப்படி செய்ததாக சில செய்திகள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து