முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சபரிமலை : கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்  இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் தனது மகன் கபீருடன் பம்பை வந்தார். இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார். அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் படிபூஜையில் பங்கேற்றார்.

தலையில் இருமுடி கட்டுடன் 18-ம் படி வழியாக சென்று ஸ்ரீகோவில் முன் தலையில் இருமுடி கட்டுடன் நின்றபடி தரிசனம் செய்தார். தந்திரி கண்டரரு ராஜீவரரு, அவருக்கு பிரசாதம் வழங்கினார். அன்று இரவு சன்னிதானத்தில் தங்கிய கவர்னர், காலையில் மாளிகைப்புறம் கோவில் அருகே, சந்தன செடிகளை நட்ட பின், திருவனந்தபுரம் சென்றார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட வி.ஜ.பி., தரிசன வழியாக செல்லாமல், பக்தர்களின் வரிசையில் சென்று தரிசனம் செய்தார். கவர்னர் வருகையை ஒட்டி, சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து