முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : கொரோனா என்ற பெரும் தொற்று சீனாவில் உருவானது. தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில் பொது மக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. 

இதுவரை சீனாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது .என்றாலும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை சீனா வெளியிடவில்லை. 

இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 7 கொரோனா தடுப்பூசிகளுக்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது. இதில் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் குழந்தைகளுக்குச் செலுத்தும் தகுதியுடையவை. இதன் காரணமாக கடந்த 5 நாட்களில் சீனாவில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக சீனாவில்தான் 100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் இதுவரை 43 சதவீத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து