முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 மாவட்ட மறைமுக தேர்தல் முடிவு: தமிழக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சனிக்கிழமை, 23 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12-ம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்கள் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில், 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி பதவிகளில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடந்தன. இதில் 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர்பதவிகளையும் தி.மு.க.கைப்பற்றியது. இந்தநிலையில் இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க - 6, காங்கிரஸ் - 2, வி.சி.க ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய  குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க - 62, காங்கிரஸ் - 3, அ.தி.மு.க -1 , சுயேட்சை -2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து