முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

650 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய இங்கிலாந்து நகரம் தற்போது கண்டுபிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2022      உலகம்
England 2022 06 12

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் 650 ஆண்டுகளுக்கு முன் கடலால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். 

கிழக்கு யார்க்ஷைர் நகர பகுதியில் இருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்த ரேவன்சர் ஓட் என்ற துறைமுக நகரமும் ஒன்று. 1299ம் ஆண்டு வரை செழித்து வளர்ந்த கடலோர நகராக அது இருந்து வந்துள்ளது. ஆனால், 13ம் நூற்றாண்டின் மத்தியில், கடலால் இந்நகரம் மூழ்கடிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக நீருக்குள் மூழ்கியுள்ளது. 

கடந்த 650 ஆண்டுகளாக இந்நகரை யாரும் காண முடியவில்லை. பல ஆண்டுகளாக அதன் இருப்பிடம் பற்றி அறிய விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் பலனாக, சமீபத்திய தேடுதலில் நீரின் மேற்பரப்புக்கு சில மீட்டர்கள் அடியில் பாறைகள் மற்றும் கற்களால் ஆன கட்டிடங்கள் தெரிந்துள்ளன.

இதற்கு முன்பிருந்த ஆராய்ச்சியாளர்கள் தவறான இடங்களில் அதனை தேடி வந்த நிலையில், இந்நகரம் நூற்றாண்டு காலம் ஆக கண்டறியப்படாமலேயே இருந்துள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளனர். 

இதற்காக ஹல் பல்கலை கழகத்தின் புவிஅறிவியல் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் டான் பார்சன்ஸ் தலைமையிலான குழு நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் அந்த பகுதிக்கு சென்று நகரத்தின் சுவடுகளை கண்டறியும் நம்பிக்கையில் உள்ளனர். அந்நகரின் அடித்தளம், துறைமுகம் மற்றும் கடல் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் கட்டப்பட்ட கடல்சுவர்கள் ஆகியவற்றை கண்டறிந்த பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தி 3டி வடிவிலான வரைபடம் ஒன்றை உருவாக்க உள்ளனர். 

இந்த நகரை கண்டறிவதற்காக தனது வாழ்வின் 25 ஆண்டுகளை அர்ப்பணித்த பில் மதிசன் கூறும்போது, மிக நீண்ட காலத்திற்கு பின்பு உண்மையில் இதனை கண்டறிந்தது வாழ்க்கையின் பெரிய பணி நிறைவுற்றது போன்று உள்ளது. இதனால், நான் திக்குமுக்காடி போயுள்ளேன் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து