முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்குகிறது?

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      இந்தியா
Manilagkaavai 2022-06-04

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியானது. 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியானது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாராளுமன்ற விவகார அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. 

மேலும், பாராளுமன்ற குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட 4 மசோதாக்கள் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகின. எனினும், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து