முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் புதுவை முதல்வர் ரங்கசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      இந்தியா
Rangasamy 2022-10-30

Source: provided

புதுச்சேரி ; புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், புதிதாக 16 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து புதுவை வளர்ச்சிக்கு ரூ. 2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். தற்போது ஒன்றிய அரசு ரூ. 1,400 கோடி நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

பட்ஜெட்டில் அறிவித்தப்படி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையும் புதிதாக 16 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியமும் விரைவாக வழங்கப்படும். அதன் பிறகு விண்ணப்பிப்போருக்கும் உதவித்தொகை வழங்கப்படும். புதுவையில் 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிரதமர் மோடி இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி, புதுவையில் 2 ஆயிரம் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து