முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவு செயற்கைக்கோள் மூலம் வெள்ளை மாளிகை, பென்டகனை படம் எடுத்துள்ளோம்: வடகொரியா

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      உலகம்
North-Korea-2023-11-28

பியாங்கியாங், உளவு செயற்கைக்கோள் மூலம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் கடற்படை நிலையங்களின் புகைப்படங்களை எடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்து உள்ளது.

வடகொரியா கடந்த வாரம் புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. இது உளவு பார்க்கக் கூடிய செயற்கைக்கோள் ஆகும். விண்ணில் செலுத்தப்பட்ட வடகொரியாவின் முதல் உளவு செயற்கைகோளும் இது தான். இந்த செயற்கைக்கோள் உளவு பார்த்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக வடகொ ரியா கூறியுள்ளது.

இந்த உளவு செயற்கைக்கோளானது அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் கடற்படை நிலையங்களின் புகைப்படங்களை எடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்து உள்ளது. மேலும் ரோம்நகரம், குவாமில் உள்ள ஆண்டர் சன் விமானப்படை தளம், பேர்ல் துறைமுகம், அமெ ரிக்க கடற்படையின் கார்ல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவற்றையும் புகைப்படம் எடுத்து உள்ளது.

இந்த புகைப்படங்களை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் பார்த்துள்ளதாக அம்மாநிலத்தில் இருந்து வெளியாகும் அதிகாரப் பூர்வ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், உளவு செயற்கைக்கோளை நன்றாக சரிபடுத்தும் நடைமுறை இன்னும் 2 நாட்களில் முடிவடையும். 

டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த செயற்கைகோள் உளவுப் பணியை தொடங்கும் என்று தெரிவித்து உள்ளது. ஆனால் வடகொரிய செயற்கைகோள் எடுத்து உள்ள புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து