எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போபால் : பா.ஜ.க.வில் இணையப்போவதாக ஊடகங்களில் வெளியான தகவலுக்கு ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல் நாத் பா.ஜ.க.வில் இணையப் போவதாக கடந்த சில தினங்களாக யூகமான தகவல் பரவியது. கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
இந்நிலையில், சிந்த்வாராவில் கமல் நாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பா.ஜ.க.வில் சேரப் போவதாக வெளியான தககவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல் நாத் கூறியதாவது:-
நீங்கள்தான் (ஊடகம்) அப்படி சொல்கிறீர்கள். இதை வேறு யாரும் சொல்லவில்லை. நான் என் வாயால் சொல்லி அதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? அதற்கான அறிகுறி ஏதாவது உள்ளதா? ஒன்றுமில்லை.
நீங்களே அதை கூறிக் கொண்டு, என்னிடம் கேட்கிறீர்கள். முதலில், நீங்கள் தெரிவித்த தகவலை மறுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிந்த்வாரா மாவட்டத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள கமல் நாத், மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, பல்வேறு தொகுதிகளுக்கு சென்று, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |