முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக பிரச்சினையை அலசும் ‘வெப்பம் குளிர் மழை’

திங்கட்கிழமை, 25 மார்ச் 2024      சினிமா
Hot-and-cold-rain 2024-03-2

Source: provided

ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் திரவ். கதாநாயகியாக இஸ்மத் பானு நடித்திருக்கிறார். இவர்களுடன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கனவன் மனைவி குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருவதோடு, சமூகத்தின் முக்கியமான பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. வெப்பம் குளிர் மழை படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து.

இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து படம் குறித்து கூறுகையில், “இன்றைய சூழலில் குழந்தையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அது ஒரு பிரச்சனையே இல்லை, அது ஒரு விளைவு. ஆணும், பெண்ணும் இணைவதால் ஏற்படக்கூடிய விளைவு, அது நடப்பது நம் கையில் இல்லை என்ற போதிலும் அதை மிகப்பெரிய பிரச்சனையாக இந்த சமூகம் பார்க்கிறது, அது ஏன்? என்ற கேள்வி தான் இந்த படத்தின் கதை. டிரைலரில் இடம் பெறும் கணவன் - மனைவி இடையிலான பிரச்சனை எப்படி உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியதோ, அதுபோல் திரைப்படமும் பல கேள்விகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தும்.” என்றார்.

படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான திரவ் படம் குறித்து கூறுகையில், இந்த கதை என்னிடம் வந்தது. கதை நன்றாக இருந்ததோடு, நான் பார்த்த மனிதர்களின் வாழ்க்கையை நினைவுப்படுத்தியது. குறிப்பாக என் உறவினர்களில் சிலர் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொண்டார்கள். அதனால் இந்த படத்திற்கு உதவி செய்ய முன்வந்தேன். அதன்படி படத்திற்காக இரண்டு ஹீரோக்களை நான் சிபாரிசு செய்து, அவர்களிடம் கதை சொல்ல வைத்தேன். அவர்களுக்கும் கதை பிடித்திருந்தது.

ஆனால், அவர்களுடைய தேதி சரியாக அமையாததால் அவர்களால் பண்ண முடியவில்லை. பிறகு படத்தை தயாரிக்க முடிவு செய்து, அப்போதும் ஹீரோக்களை தேடிக்கொண்டிருந்த போது அமையவில்லை. அப்போது தான் இயக்குநரிடம் நான் நடிக்கட்டுமா? என்று கேட்டேன். ஆனால், அவர் தயங்கினார். உடனே படம் தொடர்பான இரண்டு காட்சிகளை நடித்து குறும்படமாக எடுத்து அவருக்கு அனுப்பினேன். அதை பார்த்து தான் அவர் சம்மதம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து