முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிறுதியில் போபண்ணா இணை

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2024      விளையாட்டு
Bopanna 2024-03-26

Source: provided

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை போலந்தின் ஜான் ஜீலின்ஸ்கி - மொனோக்காவின் ஹ்யூகோ நிஸ் இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய போபண்ணா இணை 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஜான் ஜீலின்ஸ்கி - ஹ்யூகோ நிஸ் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. போபண்ணா இணை நாளை நடைபெறும் காலிறுதியில் நெதர்லாந்தின் செம் வெர்பீக் - ஆஸ்திரேலியாவின் ஜான் பேட்ரிக் ஸ்மித் இணையை எதிர்கொள்கிறது.

___________________________________________________________

டிக்கெட் விலை ரூ.55 ஆயிரம்

ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒவ்வொரு நகரங்களில் வெவ்வேறு விலைகளில் விற்பனையாகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் தான் ஐ.பி.எல். டிக்கெட்டுகளின் விலையை அதிக பட்சத்துக்கு விற்பனை செய்தது. பெங்களூரு- பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்துக்கு அதிகபட்ச டிக்கெட் விலையாக ரூ.55,055 விற்பனையானது. இந்த டிக்கெட் பகுதி அதிநவீன வசதிகளுடன் கொண்டது. எல்லா விதமான உணவு பொருட்களும் இந்த டிக்கெட் பாக்சில் கிடைக்கும். இதே டிக்கெட் ரூ.42,300 ஆக உள்ளது. டைனமிக் விலையில் ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையானது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.2,300 ஆகும். டைனமிக் விலையில் ரூ.5,200 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் லக்னோ அணி நிர்வாகம் மிக குறைந்த பட்ச விலையில் டிக்கெட்டுகளை விற்கிறது. 

பஞ்சாப்புக்கு எதிராக வருகிற 30-ந் தேதி நடைபெறும் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.399 ஆகும். அதிக பட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கு விற்கிறது. ராஜஸ்தான் அணியின் குறைந்தபட்ச விலை ரூ.1,200, அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் (டெல்லிக்கு எதிரான போட்டி) , மும்பை அணி ரூ.990- ரூ.15 ஆயிரம், (ராஜஸ்தான்), ஐதராபாத் அணி ரூ.750-ரூ.30 ஆயிரம், (சென்னை), குஜராத் அணி ரூ.499- ரூ.12 ஆயிரம், (ஐதராபாத்), டெல்லி அணி ரூ.2 ஆயிரம்- ரூ.5 ஆயிரம் (கொல்கத்தா), விலைகளில் டிக்கெட்டை நிர்ணயித்துள்ளது. குஜராத்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700, அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

___________________________________________________________

அணிக்கு திரும்பிய ஆல் ரவுண்டர்

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசமும் கைப்பற்றின. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 30ம் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார். இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மன் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், ஷகிப் அல் ஹசன், ஷஹாதத் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், கலீத் அஹ்மத், நஹித் ராணா, ஹசன் மஹ்முத்.

___________________________________________________________

இம்பேக்ட் விதி: பிளமிங் கருத்து

குஜராத்துடன் மோதும் ஆட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீ பன் பிளமிங் கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொருவரும் எப்போதும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலாது. ஒரு வீரர் 75 ரன்னை எடுக்கும் போது அணிக்கு உதவியாக இருக்கும். ருதுராஜ் கெய்க் வாட்- ரச்சின் ரவீந்திராவின் தொடக்கம் நீடிக்கும். தாக்கத்தை (இம்பேக்ட்) ஏற்படுத்தும் விதி அணியின் பேட்டிங்கை மேம்படுத்த உதவியது. அதை நாம் செயல்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

___________________________________________________________

விளம்பரப்படுத்த என் பெயர்: கோலி

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கெதிராக 49 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 77 ரன்கள் விளாசினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அத்துடன் 50 ரன்களுக்கு மேல் 100 முறை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். போட்டி முடிந்த பின் விராட் கோலி பேசும்போது கூறியதாவது., டி20 கிரிக்கெட் என வரும்போது உலகின் பல்வேறு இடங்களில் போட்டியை விளம்பரப்படுத்துவற்கு என்னுடைய பெயர் இணைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியும். நான் இன்னும் அதை பெற்றுள்ளேன் என யூகிக்கிறேன்.

நான் ஆரஞ்ச் தொப்பியை எதிர்பார்த்து விளையாடவில்லை. இந்த உறுதியை என்னால் உறுதியாக கொடுக்க முடியும். என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். நான் அணிக்கு அட்டகாசமான அதிரடி தொடக்கம் கொடுக்க முயற்சி செய்தேன். விக்கெட் வீழ்ந்தால் அதற்கு ஏற்ப மதிப்பீடு செய்ய வேண்டும். இது வழக்கமான பிளாட் பிட்ச் அல்ல. போட்டியை முடித்துக் கொடுக்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. பந்து அடிக்கக்கூடிய ஸ்லாட்டில் விழுந்தது. ஆனால், டீப் பாய்ன்ட் பகுதிக்கு சென்று விட்டது.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து