முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்

வியாழக்கிழமை, 28 மார்ச் 2024      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகம், புதுவையில் வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளதால் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரச்சாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.

வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு மரப்பாலம் சந்திப்பிலும், 6.30 மணிக்கு அண்ணா சதுக்கத்திலும் உதயநிதி பிரச்சாரம் செய்து இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து