முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் : த.வெ.க. விருது விழாவில் விஜய் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      தமிழகம்
Vijay- 2024-06-28

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரத்தை கட்சியின் தலைவர் விஜய் பரிசாக வழங்கினார்.

த.வெ.க. சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து, பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் விழாவுக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள், ஊக்கத்தொகை வழங்கினார்.

முதல்கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பம்சமாக 9 மாணவர்களுக்கு வைர மோதிரம் மற்றும் வைர கம்மலை விஜய் பரிசாக அளித்தார். 

அந்த வகையில் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை மாவட்டத்தை சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூரை சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகியோருக்கு வைர கம்மலை விஜய் வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்தலில் மாநில அளவில் முதல் 6 இடங்களை பிடித்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷினி, சந்தியா, திண்டுக்கல் காவியஶ்ரீ , ஈரோடு கோபிகா, ராமநாதபுரம் காவியா ஜனனி, திருநெல்வேலி சஞ்சனா ஆயுஷ் ஆகியோருக்கு வைர மோதிரங்கள் வழங்கப்பட்டன. 

இது தவிர நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் சின்னத்துரைக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து