முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகன் கைதுக்கு எதிராக போராட்டம்: அர்ஜூன் சம்பத் கைது

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      தமிழகம்
Arjun-Sampath 2024-11-17

Source: provided

கோவை : மகன் கைதுக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கோவையில் கடந்த மாதம் 27-ந்தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் நக்கீரன் கோபால் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக ஓம்கார் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ஓம்கார் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதற்கு ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவரை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க நீதிபதி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்தனர்.

ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

தடையை மீறி போராட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்தை கோனியம்மன் கோவில் அருகே போலீசார் கைது செய்தனர். மொத்தம் 25 பேர் கைதானார்கள். அவர்களை அங்குள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர். இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தால் கோவையில் நேற்று பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து