முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண மோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்

புதன்கிழமை, 24 ஜூலை 2024      தமிழகம்
Chavik-Sankar 2024-05-27

Source: provided

கரூர் : பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி, கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரை சேர்ந்த கிருஷ்ணன் (43). கரூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய பணம் அளித்திருந்தார். சில மாதங்களில் லாபத்துடன் பணத்தை தருவதாகக் கூறியவர் அதன் பிறகு தொடர்பு கொண்டபோது மிரட்டல் விடுத்துள்ளார்.

விக்னேஷ் கடந்த ஜூன் 5-ம் தேதி கரூர் வந்தப்போது கிருஷ்ணன் அவரை சந்தித்து பணத்தை கேட்டப்போது மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்து கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் கடந்த ஜூன் 5ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கர் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இவ்வழக்கில் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து