முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்: மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்  பயன் பெறுவார்கள். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்...

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், "அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2024ஐ அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தப்படும். முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பெறுவார்கள்.

பரிந்துரைகளின்... 

இந்த உயர்வு 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த முடிவால், ஆண்டுக்கு ரூ. 9,448.35 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கனவே 50% ஆக உள்ளது. இனி அது 53% ஆக இருக்கும்" என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து