முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனத் ஜெயசூர்யா அறிவுறுத்தல்

புதன்கிழமை, 24 ஜூலை 2024      விளையாட்டு
Sri-Lanka-1 2023-11-06

Source: provided

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவை  புதிதாக அமைத்த பிறகு, சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.சனத் ஜெயசூர்யா இலங்கை வீரர்கள் தலைமுடையை ஒழுங்காக வெட்ட வேண்டும் எனவும் காதில் எதையும் அணியக் கூடாது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா கூறியதாவது.,நமது அணிக்கு பொதுவான ஒழுக்கம் தேவை. எனது பதவிக்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி ஒழுக்கமாக இருக்க விரும்புகிறேன். வயதில் குறைந்தர்வர்கள் சீனியர்களான நம்மைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். 

கிரிக்கெட் என்பது மக்கள் விரும்பும் விளையாட்டாக இருக்க வேண்டும். நாம் நன்றாக செய்தால் நமக்கு பின்னர் வருபவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். அதனால்தான் இந்த மாற்றங்களை செய்யவிருக்கிறோம். கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டாக தொடர விரும்புகிறேன். பொறுமையாகவும் திமிர்தனம் காட்டாமல் இருந்தால் நாம் தோல்வியடைந்தாலும் பெரிதாக விமர்சனங்கள் வராது. மக்களிடம் கிரிகெட்டுக்கு ஆழமான காதல் இருக்கிறது. ரோஹித், கோலி, ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்குதான் நஷ்டம், நமக்கு மிகப்பெரிய லாபம் என்றார்.

_______________________________________________________________________

ரியல் மாட்ரிட் புதிய சாதனை

பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் 2023/2024 நிதியாண்டின் வருமானம் குறித்து கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது. இதில் வீரர்களுக்கான மாற்றங்கள் இல்லாமலேயே 1.073 பில்லியன் யூரோஸ் ( இந்திய மதிப்பில் 9,076 கோடி 10 லட்சம் ரூபாய்) வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 27 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரியல் மாட்ரிட் அணியில் வலைதளத்தில், “2023-2024 நிதியாண்டில் மட்டும் 1,073 மில்லியன் யூரோஸ் வருமானம கிடைத்துள்ளது. இது 2022-2023 நிதியாணடைவிட 27 சதவிகிதம் (230 மில்லியன் யூரோஸ்) அதிகம். இந்த நிதியாண்டில் விளையாட்டரங்கம் முழுமையாக செயல்படாவிட்டாலும் நமது அணி 1 பில்லியன் யூரோஸை எட்டியுள்ளது. வேறெந்த கால்பந்து கிளப் அணியும் எட்டாத சாதனை இது” எனக் குறிப்பிட்டுள்ளது. பிரபல கால்பந்து விரர் லூகா மோட்ரிச் 2025 வரை ரியல் மாட்ரிட் அணியில் விளையாட ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரபல இளம் வீரர் எம்பாப்வேயும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது. 

_______________________________________________________________________

ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கௌருக்கு ஒய்வு அளிக்கப்பட்டது. துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்தினார். இந்நிலையில் இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நேர்காணலில் கூறியதாவது.,  கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறது. கிரிக்கெட் இல்லையென்றால் நான் எதுவுமே இல்லை. 

கிரிக்கெட் எனக்கு அளித்த பெயர்போல வெறெதுவும் எனக்கு அளிக்கவில்லை. அதனால் கிரிக்கெட் எனக்கு கடவுள். நான் சிறிய வயதில் கண்ட கனவு, விளையாடும்போது நினைப்பது எல்லாமே எனக்கு கிரிக்கெட் கொடுத்ததுதான். முதல்முறையாக இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்தபோது அதை பெற்றோர்களுக்கு அனுப்புவதா அல்லது கிரிக்கெட் கற்றுக்கொடுத்த பயிற்சியாளருக்கு அனுப்புவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் இருவர்களுமே எனக்கு சமமானவர்கள் என்றார்.

_______________________________________________________________________

ஆலி போப் நம்பிக்கை

நிச்சயம் ஒருநாள் தங்கள் அணி ஒரே நாளில் டெஸ்ட் போட்டியில் 600 ரன்களை குவிக்கும் என இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆலி போப் தெரிவித்துள்ளார். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆலி போப் கூறும்போது, “சில சமயங்களில் 280 முதல் 300 ரன்களை ஒரே நாளில் எடுப்போம் அது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடியதால் விளைவது. ஆனால், ஒரே நாளில் 500 முதல் 600 ரன்களையும் வரும் நாட்களில் எடுப்போம். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.

ரன்களுக்கான பேரவா இருக்கவே செய்கிறது. ஆம், எப்போதும் ரன் பசி இருக்கிறது. ஆனால் இப்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. ஒரு பேட்டிங் அணியாக கருணையற்ற விதத்தில் அடித்து ஆட விரும்புகிறோம். ஆனாலும் இந்த ஆட்டத்தை நாங்கள் எப்படி ஆடுவோமோ அதே போல்தான் ஆடுகிறோம். ஏனெனில், இது எங்கள் தேசிய விளையாட்டு. கருணையற்ற விதத்தில் ஆடுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓர் அங்கமாகும். இப்படி ஆடு என்று போதிக்கப்பட்டுள்ளீர்களா என்று என்னிடம் கேட்டனர். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. இது எங்கள் இயல்பான ஆட்டம்தான். இப்படித்தான் கிரிக்கெட்டை யோசிக்கிறோம். ” என்றார் ஆலி போப்.

_______________________________________________________________________

தீவிர பயிற்சியில் ஆர்ச்சர்

29 வயதாகும் ஜோப்ரா ஆர்ச்சர் பிப், 2021 முதல் காயம் காரணமாக 3 விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் பிபிசி ஸ்போர்ட்டுக்கு அளித்த பேட்டியில் ஆர்ச்சர் கூறியதாவது: இந்தாண்டு முழுவதும் உபயோகித்து வரும் ஆஷஸ் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பினை அதிகப்படுத்த வேண்டும். இன்ஸ்டாகிராம் சென்று அதில் ‘ஆர்ச்சர் அடுத்த 2 வாரங்களுக்கு காயம் காரணமாக ஓய்வெடுக்கப் போகிறார்’ என்பது போன்ற பதிவுகளைப் பார்க்க சலிப்பாக இருக்கின்றன.

இந்தாண்டு முழுவதையும் சரியாக பயன்படுத்தி சில நபர்களின் கணிப்பினை தவறென நிரூபிக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆஷஸ் தொடரில் விளையாடுவேன் என நம்புகிறேன். அடுத்தாண்டு வரும் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்பேன். சில போட்டிகளில் மட்டும் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வேலைப் பளுவை குறைக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

_______________________________________________________________________

இஸ்ரேல் வீரர்களுக்கு தடை?

பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நாளை முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ தடகள வீரர் அவிஷாக் செம்பெர்க், ஜிம்னாஸ்டிக் வீரர் ஆர்டெம் டோல்கோபியாட் மற்றும் லானிர் உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய வீரர் போட்டியில் உள்ளனர். இதேபோல, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு இஸ்ரேலை தடை செய்யக் கோரி பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி கடிதம் அனுப்பியது. பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என ஐ.நா.சபையின் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனிய ஒலிம்பிக் குழுவின் கோரிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து