முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கு: சுல்தான்பூர் கோர்ட்டில் இன்று ராகுல் ஆஜர்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

லக்னோ, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார். 

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி அப்போதைய பா.ஜ.க. தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. பா.ஜ.க. பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பவர் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி கோர்ட்டு ஜாமின் வழங்கியது.இந்த வழக்கில் ஜூலை 26-ம் தேதி (இன்று) வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராக உள்ளார். இதை காங்கிரஸ் மாவட்ட தலைவர் அபிஷேக் சிங் ராணா நேற்று தெரிவித்தார். காலை 9 மணிக்கு லக்னோ விமான நிலையம் செல்லும் ராகுல் காந்தி, அங்கிருந்து சுல்தான்பூர் சென்று கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து