முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியர்கள் விவகாரம்: அண்ணா பல்கலை.யிடம் அறிக்கை கேட்கும் கவர்னர்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      தமிழகம்
Anna-University 1

சென்னை, தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக  அண்ணா பல்கலைக் கழகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

அங்கீகாரம் பெறுவதற்காக கல்லூரிகளில் முறைகேடாக பல பேராசிரியர்கள் பணியாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. 2022-2023ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக  அண்ணா பல்கலைக் கழகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என கவர்னர் அறிக்கையாக கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகத்திடம் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமமும் விளக்கம் கேட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து