முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்.லி தேர்தல் முடிவுகள் குறித்து 9-வது நாளாக தென்காசி, ஈரோடு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      அரசியல்
ADMK-PHOTO-2024-07-25

சென்னை, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தென்காசி, ஈரோடு பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 9-வது நாளாக நேற்று ஆலோசனை நடத்தினார். 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்தும் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றியும் அவர் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். 2 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தங்கள்  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 இந்த நிலையில் 9-வது நாளாக நேற்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தென்காசி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார். அதை தொடர்ந்து ஈரோடு பராளுமன்ற நிர்வாகிகளை சந்தித்து அவர்களது கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அணி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதுவரையில் 25 தொகுதி நிர்வாகிகளுடன்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.  அதை தொடர்ந்து இன்று காலையில் திருப்பூர் தொகுதியிலும், மாலையில் கடலூர் தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறாது. மீண்டு்ம திங்கட்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து