முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பழங்குடியின பிரிவினர் மோதல்: பாகிஸ்தானில் 42 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 29 ஜூலை 2024      உலகம்
Gun 2023-10-05

கராச்சி, பாகிஸ்தானில் 2 பழங்குடியின பிரிவினர் இடையே நடந்த மோதலில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கலவரத்தில் 170 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம், உப்பர் குர்ரம் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின பிரிவினரிடையே நில உரிமை தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை இருந்துள்ளது. இது முற்றிய நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். புசேரா கிராமத்தில் ஏற்பட்ட இந்த கலவரம், மற்ற கிராமங்களுக்கும் பரவியது. ஆங்காங்கே பதுங்கு குழிகள் அமைத்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக காட்சியளித்தன.

இந்த வன்முறை தாக்குதல்களில் இரு தரப்பிலும் கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கிடையே அரசு சார்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 5 நாள் தொடர் மோதலுக்கு பிறகு நேற்று சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவில் இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடக்கிறது. இதனால்  பழங்குடியின கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.

இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 42 ஆக உயர்ந்துள்ளது. 170 பேர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை தடுத்து நிறுத்தி அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர். பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இரு தரப்பினரையும் வலியுறுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து