முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்பில் மகேஷ் பொறுப்பேற்றதில் இருந்தே பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சர்ச்சைகள் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      தமிழகம்
RBU 2023-08-22

Source: provided

மதுரை : பள்ளிக்கல்வித்துறையில் அன்பில் மகேஷ் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் சாலை பசுமலையில்  உள்ள மாதா அமீர்தானந்தமயி மடத்தில் இலவச மருத்துவ முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் மற்றும் மாதா அமிர்தானந்தமயி மடத்தினர் சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாதா அமிர்தானந்தமயி மடம் சுவாமிஜி சச்சிதானந்த  ஆசி உரை வழங்கினார். நிகழ்வில் ஆடிட்டர் சேது மாதவா, மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ரோட்டரி பொருளாளர் கன்னியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் முன்னாள் அமைசச்ரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது-

2023-ல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் மகாவிஷ்ணு நெருக்கமான தொடர்பிலிருந்து உள்ளார்.அதனால் தான் ஆங்காங்கே தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது என்று செய்திகள் கசிந்து வருகிறது‌. தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்து நிர்வாகக் குளறுபடிகளில்  இருந்து இவர்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று இந்த அரசு நினைக்கிறது.அதனால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் அன்பில் மகேஷ் பொறுப்பேற்ற முதல் பல சர்ச்சைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது புதிதாக அறிக்கைகள் வெளியிடுவதும் பின்னர் அது சர்ச்சைக்கு உள்ளானதும் வாபஸ் பெறுவதுமாக நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் பாதுகாப்பு சூழ்நிலை தான் உள்ளார். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தான் பாதுகாப்பாக சூழ்நிலையில் இல்லை. அரசு பள்ளியில் தனிநபர் எப்படி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல முடியும் பள்ளிக்கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

உதயநிதி மதுரைக்கு அறிவிக்கப்படாத முதல்வராக வருகிறார். மதுரையே அல்லோல்லாபட்டு உள்ளது.முதலமைச்சருக்கு ஒரு படி மேல் ஆடம்பரங்கள் அமைச்சர்களால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக கட்சி நிகழ்ச்சிக்கு கட்சிக்கொடி ஊண்றுவதற்கு காவல்துறையினரால் ஆயிரம் நிபந்தனைகள் விஜய் மாநாட்டிற்கு 21 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவர்களால் மதுரை விமான நிலையத்திலிருந்து விவசாயக் கல்லூரி வரை கொடிகள்  வைக்கப்பட்டுள்ளது.இதற்கு யார் அனுமதி தந்தார்கள் எங்கு வாங்கினார்கள் என்பது விசாரணையில் தான் தெரியும். 

அம்மாவின் முயற்சிகளால் மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டுவரப்பட்டது இன்னும் கட்டிடம் கூட எழுப்பாத அந்த இடத்தினை அறிவிக்கப்படாத முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுவாரா மதுரையில் பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியாக பார்க்கவில்லை பட்டாபிஷேகம் நடத்துகின்ற நிகழ்ச்சியாக தான் பார்க்கிறேன் தொகுதிக்கு ஆயிரம் பேர் என பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்குகிறார்களா அல்லது ஒரே தொகுதியில் பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்குகிறார்களா என்று தெரியவில்லை. மதுரையில் அன்னை மீனாட்சிக்கு மட்டும் தான் பட்டாபிஷேகம் முடியாட்சி நடைபெறும். ஆனால் இங்கு இளவரசருக்கு முடிசூட்டும் விழாவிற்கு அமைச்சர்கள் கடந்த 10 தினங்களாக ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் வேலை பார்த்துக் கொண்டுள்ளனர். இதனால் எந்த மனுக்களும் கொடுக்க முடியவில்லை  ஸ்தம்பித்து போய் உள்ளது. உதயநிதியின் மதுரை வருகை மதுரைக்கு வளர்ச்சியா அல்லது வேடிக்கை காட்டுவதற்காக வருகிறாரா வீழ்ச்சியா என்பது மீனாட்சி அம்மனுக்கு வெளிச்சம் மதுரை மக்களுக்கே வெளிச்சம் அவரவர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக தந்தை அமரிக்காவில் இருக்கும் போது தனையன்னுக்கு  முடி சூட்டு விழா நடைபெறுகிறது. மதுரையில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களும் முடக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை  இதற்கெல்லாம் அறிவிக்கப்படாத முதல்வர் பதிலளிப்பாரா ?.

பள்ளி என்பது மாணவர்களின் மாற்றம் முன்னேற்றத்திற்குரிய இடம் விருப்பப்பட்ட கருத்துக்களை பொதுவெளியில் பேசலாம் அரசு பள்ளிகளில் பேசுவது என்பது தவறு எங்களுடைய எடப்பாடியார் சர்ச்சை கருத்துக்களை பள்ளிகளில் பேசுவதற்க்கு யார் அனுமதி அளித்தார்கள் என்று தான் கேள்வி எழுப்பி உள்ளார். புத்தகத் திருவிழாவில் சாமி பாட்டு போட்டு பள்ளி குழந்தைகள் சாமி ஆடுவது என்பது எப்படி உள்ளது எங்கே போகிறது இந்த நாடு இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போக நினைக்கிறார்கள். போதை நடமாட்டத்தில் பாதுகாப்பில்லை மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை அதற்கு முதல் இந்த அரசு முதல் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து