முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு? - மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      இந்தியா
Monkey 2023-02-20

Source: provided

புது டெல்லி : குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஒருவருக்கு அந்த நோய்க்கான அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது.

 நோயாளி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. கவலை அடையத் தேவை இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நபரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவருக்கு குரங்கு அம்மை நோய் உள்ளதா என்பதை உறுதி செய்ய சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம், ஏற்கனவே நிறுவிக்கப்பட்ட நெறிமுறைகளின் படி, இந்த விவகாரம் கண்காணிக்கப்படுகிறது. நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், நாட்டில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் அந்த நபருடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

முன்னதாக மேற்கொண்ட இடர் மதிப்பீட்டோடு இந்த புதிய வழக்கின் வளர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. என்றாலும் அச்சப்பட தேவை இல்லை. இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் தொடர்பான நோய் வழக்குகளை கையாள, நாடு முழு அளவில் தயாராக உள்ளது. சாத்தியமான ஆபத்துகளை எதிர்கொள்ளவும் அவற்றைத் தணிக்கவும் நடவடிக்கைகள் தயாராக உள்ளன என தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம்  தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து