முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் எம்.பி. ஜவ்கர் சிர்கார்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      இந்தியா
Jawhar-Sircar 2024-09-08

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை அரசு கையாண்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஜவ்கர் சிர்கார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். 

இதுகுறித்து ஜவ்கர் சிர்கார், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

 கட்சியின் சில பிரிவு தலைவர்களிடம் அதிகரித்து வரும் வலுவான ஆயுத யுக்திகள் குறித்து மாநில அரசு அக்கறை காட்டாததால் நான் பெரிதும் ஏமாற்றம் அடைந்தேன். ஊழல் அதிகாரிகள் (அல்லது மருத்துவர்கள்) உயர் மற்றும் முக்கிய பதவிகளை பெறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனது இத்தனை ஆண்டு அனுபவத்தில், அரசாங்கத்துக்கு எதிராக இந்த அளவுக்கான எதிர்ப்பு மற்றும் நம்பிக்கையின்மையை நான் பார்த்ததே இல்லை. ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த பயங்கர சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட நான் ஒரு மாத காலம் பொறுமையாக காத்திருந்தேன். 

பழைய மம்தா பானர்ஜி பாணியில், போராட்டம் நடத்தும் இளநிலை மருத்துவர்களுடன் நீங்கள் நேரடியாக பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவே இல்லை. அரசு இப்போது என்ன தண்டனை நடவடிக்கையை எடுத்திருந்தாலும் அது மிகவும் குறைவு மற்றும் தாமதமானதே.

கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்குவங்கத்தின பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்காக எனக்கு நீங்கள் அளித்த வாய்ப்புக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இனியும் நான் எம்.பி.யாக தொடர விரும்பவில்லை. 

மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல், வகுப்புவாதம் மற்றும் எதேச்சதிகாரத்துக்கு எதிரான எனது அர்ப்பணிப்பு வெறும் வார்த்தைகளால் ஆனது இல்லை. மோதலுக்கு அப்பாற்பட்ட அணுகுமுறையை கட்சி எடுக்காவிட்டால், மாநிலத்தை வகுப்புவாத சக்திகள் கைப்பற்றும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து